Home இலங்கை குற்றம் யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது

யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது

0

யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த
சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றையதினம்(27)  கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர் நேற்றையதினம்
பாடசாலையில் இருந்து வரும்போது மருதனார்மடம் பகுதியில் வைத்து முகத்தை மூடி
துணி கட்டியிருந்த நபர் ஒருவர் அவரது தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.

நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை

பாதிக்கப்பட்ட ஆசிரியர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவு செய்துள்ளார்.

அந்தவகையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார்
நேற்றையதினமே 26 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதாகி 8 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த
பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version