Home முக்கியச் செய்திகள் கருணா, பிள்ளையானுடன் இணைந்துள்ள ரணில்: அம்பலப்படுத்தும் அனுர தரப்பு

கருணா, பிள்ளையானுடன் இணைந்துள்ள ரணில்: அம்பலப்படுத்தும் அனுர தரப்பு

0

கருணா, பிள்ளையான் போன்றோரை இணைத்துக் கொண்டு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் (04) ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் வழிநடத்தல்

அதன் போது, ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, பிள்ளையான் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

சட்ட நடவடிக்கைகள்

இதேவேளை, பிள்ளையான் மற்றும் கருணா போன்றோரை இணைத்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நிறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version