Home இலங்கை அரசியல் அல் ஜசீராவுடன் மோதி சிதறிப்போன ஃபெராரி ஓட்டுனர்: ரணிலை கேலி செய்த அநுர தரப்பு

அல் ஜசீராவுடன் மோதி சிதறிப்போன ஃபெராரி ஓட்டுனர்: ரணிலை கேலி செய்த அநுர தரப்பு

0

பிரபல சர்வதேச ஊடகமான அல் ஜசீராவுடன் ரணில் விக்ரமசிங்க முரண்பட்ட விடயமானது, அரசியல் தரப்புகளில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கமும் குறித்த சம்பவத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அதன்படி, நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தை சபைத் தலைவரான பிமல் ரத்நாயக்க இன்று (07) நாடாளுமன்றில் விமர்சித்துள்ளார்.

அதன்போது, இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஒரு மோசமான செய்தியுடன் ஆரம்பிப்பதாக கூறிய பிமல், அண்மையில் கோர விபத்து ஒன்று இடபெற்றதாக கூறினார்.

அல் ஜசீராவுடன் விபத்து

அதில், ஃபெராரி சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதாக கூறியவர், அல் ஜசீராவுடன் மோதி விபத்துக்குள்ளாகி சிதறிப் போயுள்ளதாக பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

அதனால், அவரின் மூளைக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், எதனை பேச வேண்டும் என்று தெரியாமல் தேவையில்லாதவற்றை பேசி கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஃபெராரி உரிமம்

இந்த நிலையில், நாடாளுமன்றில் போக்குவரத்து விவகாரங்கள் தொடர்பான விவாதத்தின் போது அதற்கான வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாக சபைத் தலைவரான பிமல் ரத்நாயக்க கூறினார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாடாளுமன்றம் வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஃபெராரி உரிமம் உள்ள ஒருவர் எல்-போர்டு ஓட்டுநர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என பதில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

https://www.youtube.com/embed/sTTnaHZLJbs

NO COMMENTS

Exit mobile version