Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் குறித்து ரணிலின் அதிரடி தீர்மானம்

அதிபர் தேர்தல் குறித்து ரணிலின் அதிரடி தீர்மானம்

0

சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), பசில் ராஜபக்சவிடம் (Basil Rajapaksa) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை அதிபர் ரணில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரை அறிவிப்பதாக அக்கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச அதிபர் ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பசில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் 

இதன்போது தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில், அரசியலமைப்பு வாக்கெடுப்பு ஒன்று அறிவிக்கப்படும் வரை, அதிபர் வேட்புமனு தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் இன்றி பொதுவான சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கங்களை முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/ranil-s-decision-on-the-sl-presidential-election-1714015310

NO COMMENTS

Exit mobile version