வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் (K. Kader Masthan) பதாதைகள் அகற்றப்பட்டுள்ளன.
குறித்த பதாதைகள் இன்று (01) காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்காக ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் வவுனியாவிற்கு (Vavuniya) விஐயம் செய்திருந்தார்.
பிராந்திய ஊடகவியலாளர்
இதனையடுத்து வவுனியா நகரப்பகுதிகளில் ரணில் மற்றும் காதர்மஸ்தான் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த பதாதைகள் ஜனாதிபதி ரணில் வருகை தருவதற்கு முன்பாகவே காவல்துறையினரால் அகற்றப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரை அழைத்த காவல்துறையினர் அவர்களது விபரங்களை பதிவுசெய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.