Home இலங்கை அரசியல் யாழ் நூலகத்தை எரித்த அமைச்சரவையில் ரணில்! அம்பலப்டுத்திய அரசாங்கம்

யாழ் நூலகத்தை எரித்த அமைச்சரவையில் ரணில்! அம்பலப்டுத்திய அரசாங்கம்

0

யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மட்டுமே இப்போது இருக்கின்றார் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் கதைக்கும்போது வெள்ளைப் பத்திரிகை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கறுப்பு ஜூலை

அந்தப் பெயரை கூறும் போதே எமக்கு பயம் வருகின்றது. 1981இல் ரணில் விக்ரமசிங்கவால் கொண்டுவரப்பட்ட வெள்ளைப் பத்திரிகையின் நோக்கம் முழுமையாக கருமையானது.

அந்த வெள்ளைப் பத்திரிகை மூலம் கறுப்பு வேலைத்திட்டங்களை கொண்டு வந்த ரணில் போன்றோரே யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தீ வைத்தனர். கறுப்பு ஜூலையையும் ஏற்படுத்தினர்.

இப்போது அரகலய வழக்கிலும் ரணில் தோல்வியடைந்துள்ளார். கறுப்பு ஜூலையை உருவாக்கிய அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களில் தற்போதுள்ள ஒருவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும்” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/IXg6G7UnQSw

NO COMMENTS

Exit mobile version