முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரணில் தொடர்பில் இன்று (25) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சிறப்பு மருத்துவ அறிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை கண்காணிக்கும் சிறப்பு மருத்துவர்கள் குழு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து சிறப்பு மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராகி வருகின்றனர்.
மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக தகுதியானவரா என்பது குறித்து நாளை (26) முடிவு எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
