Home இலங்கை சமூகம் விகாரையில் தேங்காய் உடைத்து ரணிலின் கைதுக்கு எதிர்ப்பு

விகாரையில் தேங்காய் உடைத்து ரணிலின் கைதுக்கு எதிர்ப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விகாரை ஒன்றில் தேங்காய் உடைத்து இறைவழிபாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வு இன்றையதினம் (24.08.2025) இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர்கள்

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்காக, பெருந்தோட்ட பகுதிகளில் நாளை முதல் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. 

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ரணில் விக்ரமசிங்க விரைவாக குணமடைவதற்காக வேண்டி பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

NO COMMENTS

Exit mobile version