Home இலங்கை அரசியல் ரணிலின் பாரிய மோசடி அம்பலம்

ரணிலின் பாரிய மோசடி அம்பலம்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பொது நிதியான ரூ.16 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பயன்படுத்தியதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(bimal ratnayake) இன்று(15) தெரிவித்தார்.
 

தனிப்பட்ட விஜயத்திற்காக பொது நிதியைப் பயன்படுத்துவது குற்றம் என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

வெளியுறவு அமைச்சு விசாரணை நடத்த வலியுறுத்து

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார்.

விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவியுடன் பத்து பேர் கொண்ட குழு சென்றதாக அவர் கூறினார்.
 

இந்த பயணம் ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட விஜயம் என்று விவரிக்கப்பட்டதாகவும், பின்னர் நிதியைப் பெறுவதற்காக ஜனாதிபதி செயலகம் அனுப்பிய கடிதத்தில் அதிகாரபூர்வ விஜயம் என்று விவரிக்கப்பட்டதாகவும் ரத்நாயக்க குற்றம் சாட்டினார்.
 

NO COMMENTS

Exit mobile version