நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அவரது இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் விபத்தின் போது மது அருந்தியமைக்கான எவ்வித சான்றும் உறுதியாகவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேருக்கு நேர் மோதி
கடந்த 11 ஆம் திகதி சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இரவு 7.45 மணியளவில் கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி அசோக ரன்வலவின் ஜீப் வண்டி விபத்திற்குள்ளாகி இருந்தது.
விபத்தின் போது அவர் மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இவ்விடயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
