Home இலங்கை சமூகம் பாலியல் அத்துமீறல் குற்றம்: இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் அத்துமீறல் குற்றம்: இந்திய மத போதகருக்கு ஆயுள் தண்டனை

0

2018 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறப்படும்
குற்றத்துக்காக,சுய பாணி கிறிஸ்தவ மத போதகர் பஜிந்தர் சிங் என்பவருக்கு இந்திய
நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள தனது வீட்டில் வைத்து, சிங் தன்னை பாலியல்
அத்துமீறல் செய்ததாகவும், அந்த செயலைப் பதிவு செய்ததாகவும், பின்னர் அந்த
காணொளியை பயன்படுத்தி தன்னை மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் குற்றம்
சுமத்தியிருந்தார்.

ஆயுள் தண்டனை 

இலட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட சிங், தனது சுவிசேஷகர் பாணி பிரசங்கம்
மற்றும் நிகழ்வுகளுக்காக புகழ் பெற்றவராக பார்க்கப்படுகிறார்.

அவர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் மீது கைகளை வைத்து
குணப்படுத்துவதாக பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version