Home இலங்கை சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

முன்னெப்போதும் இல்லாத வகையில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

0

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு முறை ஏற்படுத்தப்படும் என கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே (uplai pannilage)தெரிவித்தார்.

கம்பகா(gampaha) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சமூக வலுவூட்டலுக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பதவி உயர்வு

இதன்படி அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்குத் தேவையான தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய பிரச்சினையை சில வாரங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.   

NO COMMENTS

Exit mobile version