Home சினிமா புதிய அவதாரம் எடுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் எதிர்பார்க்காத அறிவிப்பு

புதிய அவதாரம் எடுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் எதிர்பார்க்காத அறிவிப்பு

0

ராஷ்மிகா மந்தனா

இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா 2 படம் வெளிவரவுள்ளது.

இதை தொடர்ந்து தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா இதுவரை நடித்திராத கதைக்களத்தில் கமிட்டாகியுள்ளார்.

புதிய அவதாரத்தில் ராஷ்மிகா 

இந்த ஆண்டு வெளிவந்து உலகளவில் ரூ. 700 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் ஸ்ட்ரீ 2. ஹிந்தியில் வெளிவந்த இப்படத்தை மேட்காப் நிறுவனம் தயாரித்து இருந்தனர். இவர்களுடைய தயாரிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தான் ‘தாமா’.

ஹாரர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு வெளிவந்து ஹிட்டான ‘முஞ்யா’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் தான் இப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ஆயுஷ்மான் குரானா நடிக்கிறார் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/rashmika-mandanna-new-horror-movie-1730432478

NO COMMENTS

Exit mobile version