Home சினிமா விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்ற ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் வீடியோ

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்ற ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் வீடியோ

0

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவது குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளனர். புஷ்பா 2 படத்தின் விழா ஒன்றில், உங்களுடைய வருங்கால கணவர் சினிமாவை சேர்ந்தவரா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா “அது எல்லாருக்கும் தெரியும்” என கூறினார்.

எம்புரான் படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

இதற்கு சில மாதங்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து உணவு உண்ணும் புகைப்படம் கசிந்தது. அதே போல் மாலதீவில் இருவரும் சென்றபோது எடுத்துகொண்ட புகைப்படங்களும் ரசிகர்களிடையே வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டிங்

இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா தனது முகத்தை மறைத்து பிரபல ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த போட்டோ கலைஞர்கள், ராஷ்மிகா அடையாளம் கண்டு, அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். பின் தனது மாஸ்க் மற்றும் தொப்பியை கழற்றி அவர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ஹோட்டல் உள்ளே சென்றார் ராஷ்மிகா.

இவர் உள்ளே சென்று சில நிமிடங்களிலேயே ஹோட்டல் பின்புறமாக இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து ஹோட்டல் உள்ளே சென்றார். அதையும் போட்டோ கலைஞர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தற்போது அவை இணையத்தில் வைரலாகி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version