Home சினிமா புஷ்பா 2 ராஷ்மிகா சம்பளம்! இந்தியாவிலேயே காஸ்ட்லீ நடிகையா? அவரே சொன்ன பதில்

புஷ்பா 2 ராஷ்மிகா சம்பளம்! இந்தியாவிலேயே காஸ்ட்லீ நடிகையா? அவரே சொன்ன பதில்

0

நடிகர் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இன்று மும்பையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்த நிலையில் அதற்கு கருப்பு நிற உடையில் செம கவர்ச்சியாக வந்திருக்கிறார் ராஷ்மிகா.

சம்பளம்

அது மட்டுமின்றி IFFI விருது விழாவிலும் ராஷ்மிகா கலந்துகொண்டு புஷ்பா படத்தை ப்ரோமோஷன் செய்தார்.

மேடையில் ராஷ்மிகா பேசும்போது அவரிடம் சம்பளம் பற்றிய ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்கள். ‘புஷ்பா 2 படத்திற்கு பிறகு இந்தியாவில் அதிகம் காஸ்ட்லீயான நடிகை நீங்களா தானாமே’ என கேள்வி கேட்டதற்கு, ‘அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது உண்மை இல்லை’ என கூறி இருக்கிறார்.

புஷ்பா முதல் பாகத்திற்கு 2 கோடி ருபாய் சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா தற்போது இரண்டாம் பாகத்திற்கு 10 கோடி பெற்றதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/rashmika-salary-for-pushpa-2-1732901118

NO COMMENTS

Exit mobile version