Home இலங்கை சமூகம் எலிக்காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

எலிக்காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

0

எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை நாடி உயிரிழப்பை
தவிர்க்குமாறு கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்
சிவஞானசுந்தரம் சேரலாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெள்ளம் வடிந்து மக்கள் வீடுகளுக்கு செல்கின்ற
நிலையில் நீர்ச்சிரங்கு ஏற்படுவதை தவிர்க்க பாதங்களை மெல்லிய சுடுதண்ணீரில்
கொண்டிஸ் பளிங்குகளை இட்டு பாதங்களை கழுவினால் நீர்ச்சிரங்கு இல்லாது போகும்.

அத்தோடு, வெள்ளத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் நிலை காணப்படுவதுடன் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உரிய சிகிச்சை

விவசாயிகள், வெள்ள
அனர்த்தங்களில் கடமையாற்றுபவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களின்
ஆலோசணைகளைப்பெற்று வாரம் ஒரு முறை தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எலிக்காய்ச்சல் அறிகுறியான கடுமையான காய்ச்சல், தலைவலி, வயிற்றுநோ போன்ற
அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை நாடி
உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும்.

மரணம் நிச்சயம்

குறித்த அறிகுறிகளை கருத்தில்
கொள்ளாது இருந்தால் எலிக்காய்ச்சல் காரணமாக மூளை, சிறுநீரகங்கள், ஈரல்
பாதிக்கப்பட்டால் மரணம் நிச்சயம்.

வாந்திபேதி, நெருப்புகாய்ச்சல், செங்கண் மாரி போன்றவை இலையான் கழிவுகளில்
இருந்து உணவுகளில் இருப்பதால் குறித்த நோய்கள் ஏற்படுகின்றன.

மக்களுக்கான
சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கு மாவட்டத்திலுள்ள நான்கு சுகாதார வைத்திய
அதிகாரிகளை எப்பொழுதும் தொடர்பு கொள்ளமுடியும் என தெரிவித்துள்ளார்.

கரைச்சி -0774433172

கண்டாவளை -0777252136

பூநகரி -0772364680

பளை-0776630613

NO COMMENTS

Exit mobile version