ரத்னம்
நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. அவரது கரியரிலேயே ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்றால் அது மார்க் ஆண்டனி திரைப்படம் தான்.
தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இவர் காம்போவில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரத்னம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
வசூல்
இந்நிலையில் ரத்னம் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தற்போது வரை இப்படம் உலக அளவில் 8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.