Home சினிமா வீடு ஜப்தி சர்ச்சைக்கு நடுவில் ரவி மோகன் கெனிஷா உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க

வீடு ஜப்தி சர்ச்சைக்கு நடுவில் ரவி மோகன் கெனிஷா உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க

0

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்ட நிலையில் திடீரென மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது ரவி மோகன் தனது புது தோழி கெனிஷா உடன் தான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு வருகிறார்.

திருப்பதியில் ஜோடி

இந்நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக விரைவில் நடந்த இருக்கிறார். அதற்காக தான் தற்போது திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர். 

ரவி மோகனுக்கு சொந்தமாக சென்னை ஈசிஆரில் இருக்கும் பங்களாவுக்கு கடந்த பல மாதங்களாக தவணை செலுத்தாத நிலையில் அதை ஜப்தி செய்ய வங்கி தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த சர்ச்சைக்கு நடுவில் அவர் திருமலைக்கு சென்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version