Home சினிமா 22 வருஷம் ஆகிடுச்சு.. திடீரென ரவி மோகன் வெளியிட்ட போஸ்ட், இணையத்தில் வைரல்

22 வருஷம் ஆகிடுச்சு.. திடீரென ரவி மோகன் வெளியிட்ட போஸ்ட், இணையத்தில் வைரல்

0

ரவி மோகன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி மோகன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்திருந்தார்.

தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தன் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருப்பினும் ரவி மோகன் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக நடிகர் யஷ் செய்த விஷயம்.. என்ன தெரியுமா?

திடீர் போஸ்ட்

அதாவது, ரவி மோகன் நடித்து ஹிட்டான “ஜெயம்” திரைப்படம் வெளியாகி 22 வருடம் ஆகிவிட்ட நிலையில், மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” ஜெயம் படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகும் நிலையில் கடவுளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version