Home சினிமா எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்த ரவி மோகன்.. இயக்குநர் யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்த ரவி மோகன்.. இயக்குநர் யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி, ஜீனி, கராத்தே பாபு ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார்.

என்னை நானே இதுவரை அப்படி பார்த்தது இல்லை.. ரவி மோகன் உடைத்த ரகசியம்

Bro Code

இந்த நிலையில், இவருடைய அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு BR Code என தலைப்பு வைத்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் யோகிதான் இப்படத்தை இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, ரவி மோகன்தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதன்மூலம், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் ரவி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version