Home இலங்கை சமூகம் இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் : ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் : ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

0

இந்திய கடற்றொழிலாளர்களின்
அத்துமீறல் குறித்து கவனஞ்செலுத்துமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்று (12) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட
ஆர்ப்பாட்டப் பேரணியினையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

இழுவைப் படகுகளின் அடாவடி

சந்திப்பின் போது இந்திய
இழுவைப் படகுகளின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப்
பிரச்சினைதொடர்பில் உரிய கவனஞ்செலுத்துமாறும், உரிய தரப்பினரின் கவனத்திற்கு
கொண்டுவருமாறும் மாவட்ட செயலாளரிடம் ரவிகரன் வலியுறுத்தினார்.

இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version