Home இலங்கை அரசியல் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தார் ரவிராஜ் சசிகலா

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தார் ரவிராஜ் சசிகலா

0

இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றையதினம் அவர் கையெழுத்திட்டார்.

நூலிழையில் தவறிப்போன வெற்றிவாய்ப்பு

இந்த நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசுவாமி, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் நூலிழையில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டிருந்தார்.

அனுமதி மறுத்த தமிழரசுக்கட்சி

இந்த நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட அவர் விண்ணப்பித்திருந்த போதிலும் அவருக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

Source: https://ibctamil.com/article/raviraj-sasikala-joined-atna-1728301154

NO COMMENTS

Exit mobile version