Home இலங்கை அரசியல் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் RAW நகர்வு..! விடுதலைப் புலிகளை இலக்கு வைத்த இந்தியா

ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் RAW நகர்வு..! விடுதலைப் புலிகளை இலக்கு வைத்த இந்தியா

0

தாவூத் இப்ராஹிமின் ‘சிண்டிகேட்’ என்ற அமைப்பு தென்னிந்தியா வழியாக போதைப் பொருட்களை கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்  இந்தியாவின் பலவீனத்தை காட்டுகிறது என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்தியா எவ்வாறு அமெரிக்காவிற்கு அடிமையாக உள்ளதோ அதேபோன்று ஈழத்தமிழர்களும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும் இராணுவ ஆய்வாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா. குஜராத் மற்றும் பிற வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் டி-கேங் சந்தித்த இழப்புகளை ஈடுசெய்ய இந்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

இந்தியா இந்த ஜென்மத்தில் திருந்த வாய்ப்பில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள விஷயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 குறித்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவாக கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்

https://www.youtube.com/embed/YvGKV4yvf3I

NO COMMENTS

Exit mobile version