யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாரிய அளவில் சேதமடைந்து காணப்பட்ட வீதியை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை சீர் செய்தது, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
யாழ். அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று
பாரிய சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
வீதி அபிவிருத்தி
குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக
காணப்படுவதுடன் , 789 வழித்தட பேருந்துகள் பயணிக்கும் பிரதான வீதியாகவும் இந்த
வீதி காணப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கவனத்து கொண்டு
செல்லப்பட்டதுடன், இந்த வீதி தொடர்பான விடயங்கள் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.
இவ்வாறான பின்னணியில் விரைந்து செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர்
குறித்த குழியை நிரவி, அந்த மதகில் இருந்த குழியை சீர் செய்தது, பாதுகாப்பான
பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மக்கள்
தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்