Home முக்கியச் செய்திகள் தரைவழியாக கொண்டுவரப்படும் இலங்கையர்கள்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

தரைவழியாக கொண்டுவரப்படும் இலங்கையர்கள்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

0

மத்தியகிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக சிறப்புத் தேவை ஏற்பட்டால், இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் விஜித் ஹேரத்(Vijitha Herath) இன்று(19) நாடாளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால், எல்லை நாடுகள் வழியாக இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எல்லை நாடுகள்

“நாங்கள் அவர்களை தரை வழியாக எல்லை நாடுகளுக்கு கொண்டு வருவோம், அங்கிருந்து விமானங்களை அனுப்பி அவர்களை திருப்பி அழைத்து வருவொம் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version