Home இலங்கை சமூகம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக விசேட நடவடிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக விசேட நடவடிக்கை

0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

மே மாத தொடக்கத்தில் பொதுமக்களின் கருத்தையும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களையும் பெற நடவடிக்கை எடுக்கவும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களையும் பெறவும் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கடந்த 11 ஆம் திகதி நீதி அமைச்சில் நடைபெற்றது.

தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை இந்தக் கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அத்துடன், புதிய சட்ட முன்வரைவு உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு மசோதாவாக இருக்க வேண்டும் என்றும், இந்த நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தத் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முந்தைய அரசாங்கங்கள் உரிய முறையில் செயற்படவில்லை எனவும், தற்போது நியமிக்கப்பட்ட குழு, இந்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான பொருத்தமான விடயங்களை மிகக் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் நீதி அமைச்சர் குழுவின் உறுப்பினர்களுக்கு தெரிவித்ததாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version