Home இலங்கை சமூகம் கிளிநொச்சி-புளியம்பொக்கணை கிராமத்திற்கு செல்கின்ற வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

கிளிநொச்சி-புளியம்பொக்கணை கிராமத்திற்கு செல்கின்ற வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

0

கிளிநொச்சி- புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து புளியம்பொக்கணை
கிராமத்திற்கு செல்கின்ற வீதி புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வு இன்று(30) கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த வீதியானது 1.3 KM தூரம் கொண்ட காப்பற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதுடன் 5.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது.

வீதி புனரமைப்பு 

வடமாகாணத்திற்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர்
கண்டாவளை பிரதேச செயலாளர் ,தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட
அமைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version