தம்பலகாமம் பரவிபான்ஜான் குளம், சுமார் 12 பில்லியனுக்கும் அதிகமான செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் உதவியுடன் உலக வங்கியின் நிதி
ஒதுக்கீட்டின் கீழ் இந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.
சுமார் 502 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.சாலிய புர மற்றும்
பத்தாம் குலனி போன்ற பகுதிகளின் விவசாய நடவடிக்கைகளுக்குப் பிரதான நீராதாரமாகத் திகழ்கிறது.
நீர்க் கசிவு
கடந்த காலங்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான நீர்க் கசிவு காரணமாக, விவசாய நிலங்களுக்குத் தேவையான
நீரை வழங்குவதில் பெரும் தடை நிலவி வந்தது.
விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று,
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் இந்த அரசாங்கத்தால் குளம் மீள்
புனரமைப்புச் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு 2024/10/01 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள் துரித கதியில் நடைபெற்று,
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
புனரமைப்புப் பணி
இந்த புனரமைப்புப் பணி நிறைவடைவதன் மூலம், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும்
மீனவர்களின் வாழ்வாதாரம் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்ப் பற்றாக்குறை
நீங்குவதால் விவசாய உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி
மக்களின் பொருளாதாரம் மேம்படும் எனவும் நம்பப்படுகிறது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இக்குளத்தின் புனரமைப்பு, அப்பகுதிக்கு விவசாய
மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
