Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு..!

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு..!

0

கிளிநொச்சி (Kilinochchi ) மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று (04) அதிகாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின்
அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட போதே கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. 

மீட்கப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Source: https://tamilwin.com/article/recovery-of-80-kg-kerala-drugs-in-pooneryn-1730700942

NO COMMENTS

Exit mobile version