Home இலங்கை சமூகம் அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் – அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் – அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

அரச சேவையில் புதிதாக 72,000 அரசாங்க ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த ஆட்சேர்ப்புகள் ஒவ்வொரு துறையினாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள்

இந்தக் குழுவில், சுகாதார சேவைக்காக 9,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 7,200 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 1,800 பேர் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் தேவை மற்றும் வெற்றிடங்களை கருத்தில் கொள்ளாமல் அரசாங்க ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ததாகவும், அரசியல் தேவைகளின் அடிப்படையில் அவர்கள் பாகுபாடற்ற முறையில் ஆட்சேர்ப்பு செய்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு 

சில அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் எந்த அமைச்சரின் காலத்தில் இணைந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். எனினும் அரசாங்கத்தில் அத்தகைய முறைகளைப் பின்பற்றுவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அரசியல் நியமனங்கள் வழங்குவதில்லை. அரச சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்கள் மற்றும் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்பு செய்யவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் மயமாக்கலைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகளையும் செய்துள்ளோம். ஓய்வு பெறும் அளவிற்கு சில ஒழுங்குமுறைகளுடன் ஆட்சேர்ப்புகள் செய்யப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version