Home இலங்கை கல்வி க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

0

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பதில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென்று பதில் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். எஸ்.பீ. சூரியபெரும தெரிவித்துள்ளார்.

கோரிக்கை பத்திரம்

2025 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்தியாக இருந்தால், அவர்களுக்காக தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதத்தை வெளியிடுவதற்காக மாத்திரம் நாளை சனிக்கிழமை ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் திறந்திருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கோரிக்கை முன்வைக்காத இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினூடாக உறுதிப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கை பத்திரத்தை எடுத்து வர வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version