Home இலங்கை சமூகம் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

0

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன (N.K Jayawardena) குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்களின் விலை

இதனடிப்படையில், மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எரிவாயு விலையை குறைப்பதால் மட்டுமே வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version