Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் களைகட்டிய றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா

கிளிநொச்சியில் களைகட்டிய றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா

0

பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா பசுமை பண்ணையில் (ReeCha Organic Farm) உணவு திருவிழா -2024 (Reecha Food Festival ) வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த உணவுத் திருவிழாவானது  நேற்றையதினம் (08.09.2024) கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்றது.

குறித்த உணவு திருவிழாவில் றீ(ச்)ஷாவில் விளையக் கூடிய விளை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் இம்மாதம் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மீண்டும்  இந்த உணவு திருவிழா இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், றீ(ச்)ஷா உணவு திருவிழாவில் நேற்றைய தினம் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேலதிக விடயங்களை காணொளியில் காணலாம்.

NO COMMENTS

Exit mobile version