Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷாவில் அன்னாசி பழச்செய்கை அமோகம்

றீ(ச்)ஷாவில் அன்னாசி பழச்செய்கை அமோகம்

0

கிளிநொச்சி(kilinochchi) – இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) அன்னாசி பழச்செய்கையானது சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பசளைகளை பயன்படுத்தி இந்த அன்னாசி பழச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை ஒரு விசேட அம்சமாகும்.

இந்த அன்னாசி பழச்செய்கை தற்போது நல்ல விளைச்சளை தரக்கூடிய நிலையில் காணப்படுவதுடன் மேலும் அன்னாசி செய்கையை விரிவுப்படுத்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தயாராகி வருகின்றது.

இதேவேளை, றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது.

அத்துடன், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/bygG3uDdsR0

NO COMMENTS

Exit mobile version