Home அமெரிக்கா ஈரானை கைப்பற்றும் அமெரிக்காவின் இரகசிய திட்டம்.. மனம் திறந்த ட்ரம்ப்!

ஈரானை கைப்பற்றும் அமெரிக்காவின் இரகசிய திட்டம்.. மனம் திறந்த ட்ரம்ப்!

0

தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஈரானின் ஆட்சி மாற்றம்..

“ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?” என ட்ரம்ப் தனது பதிவில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். 

அத்துடன், தனது பதிவில் MIGA, என்றும் குறிப்பிட்டுள்ளார். இது, மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவோம் (MAGA) என்னும் ட்ரம்பின் கோஷத்தினை ஒத்ததாக உள்ளது.

அதாவது, ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவதைக் குறிக்கும் வகையில், (Make Iran Great Again) அவர் MIGA எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், இந்த பதிவினால் ட்ரம்ப் மறைமுகமாக ஈரானை அமெரிக்காவின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை தெரிவிக்கின்றாரா என சர்வதேச ரீதியில் குழப்பம் எழுந்துள்ளது. 

அதேவேளை, இது ஈரானை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்பதை விட அதனை மீண்டும் ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதையே ட்ரம்ப் நோக்கமாக கொண்டுள்ளதை எடுத்துக் காட்டும் முகமாக உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Source: https://tamilwin.com/article/regime-change-in-iran-trump-middle-east-1750628510

NO COMMENTS

Exit mobile version