Home இலங்கை சமூகம் தொடருந்து டிக்கெட்டுக்களில் அறிமுகமாகவுள்ள புதிய நடைமுறை

தொடருந்து டிக்கெட்டுக்களில் அறிமுகமாகவுள்ள புதிய நடைமுறை

0

தற்போது பயன்படுத்தப்படும் தொடருந்து டிக்கெட்டுக்கு பதிலாக, பயணிகளுக்கு முன்பணம் செலுத்திய தொடருந்து டிக்கெட்டை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka) ஸ்மார்ட் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து இலங்கை தொடருந்து திணைக்களத்தினால் இந்த திட்டம் நிர்வகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 தொழில்நுட்பக் கருவிகள்

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இந்தப் புதிய டிக்கெட்டை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், அதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டு, உரிய ஸ்மார்ட் டிக்கெட்டுக்களை பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் தொடருந்தை அணுக முடியும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, குறித்த நவீன டிக்கெட்டுக்களை சரிபார்ப்பது தொடர்பான தொழில்நுட்ப அறிவும் பயிற்சி மூலம் தொடருந்து திணைக்கள அதிகாரிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version