Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பரவலாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பரவலாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் ஏராளமான வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 26 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் கொத்மலை மற்றும் மஸ்கெலிய பிரதேச சபைகளுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்த இரண்டு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்

மாத்தளையில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் சமர்ப்பித்த வேட்பு மனுக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 08 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முசலி பிரதேச சபை மற்றும் மன்னார் நகர சபை என்பவற்றுக்காக பொதுஜன பெரமுன கட்சி சமர்ப்பித்த வேட்பு மனுக்களும் உள்ளடங்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்பு மனு மற்றும் ஏறாவூர் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வேட்பு மனுவும் உள்ளடங்கியுள்ளன.  

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு
சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு சுயேட்சைக்குழுவின்
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபைக்கு பத்து அரசியல் கட்சிகளும் மூன்று
சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் இரண்டு சுயேட்சைக்குழுவின்
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏழு கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தாக்கல் செய்த 38 வேட்புமனுவில் 34 வேட்புமனு ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளதுடன் 4 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version