Home இலங்கை சமூகம் புதிய ஜனாதிபதியும் எம்மை ஏமாற்றுகிறார் : குற்றம் சுமத்தும் காணாமல் போனோரின் உறவுகள்

புதிய ஜனாதிபதியும் எம்மை ஏமாற்றுகிறார் : குற்றம் சுமத்தும் காணாமல் போனோரின் உறவுகள்

0

காணாமல் போன தமது உறவுகளை தேடும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் எம்மை ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை
தெரிவித்துள்ளனர்.

 கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இன்று(30) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது  ஊடகங்களுக்கு
கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டம்

மேலும் தெரிவிக்கையில்,

எமது பிள்ளைகள் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். கைது
செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

  

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி நாங்கள் தொடர்ந்தும் போராடி
வருகின்றோம்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம்
முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம்.

தாய்மாரின் கண்ணீர்

இதற்கு முன் இருந்த அரசுகள் எம்மை ஏமாற்றின. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட
நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகிறோம்.

ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை
கிடைக்கவில்லை. எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.  கடந்த இடம்பெற்ற தேர்தல்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு
நீதி பெற்றுக் கொடுப்பேன் என புதிய ஜனாதிபதி கூறினார்.

ஆனால் 6 மாதங்களாகியும்
இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஏனைய ஜனாதிபதிகள் போன்று இவரும் ஏமாற்றுவதாகவே உணர்கின்றோம். இன்றுவரை
பாதிக்கப்பட்ட எம்முடன் பேசக்கூடவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியும், கண்ணீரும் எனக்கும் தெரியும் என்றார்.
அதன் வலி எனக்கு புரியும் என்றார். ஆனால் இன்றுவரை எந்த முயற்சியும் அவர்
எடுத்திருக்கவில்லை.

நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது, காணாமல் போனவர்களது புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version