Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் மாயமான சிறுவன்.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர் பகுதியில் மாயமான சிறுவன்.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுவனை கடந்த 29ஆம் திகதி அன்று முதல் காணவில்லை என உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியினை சொந்த முகவரியாக கொண்ட
குறித்த சிறுவன், கடந்த புயலுக்கு முன்னர் கருநாட்டுக்கேணி பகுதியில் தயாரின்
வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தொடர்பு கொள்ளுங்கள்.. 

இதற்கிடையில், கடந்த 28.11.2025ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும்
கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளுக்கான
தரை வழிப்பாதையான நாயாற்று பாலம் ஊடாக போக்குவரத்து பாலம் உடைவினால் இன்றுவரை
தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சிறுவன், காணாமல் போனமை தொடர்பில் எந்த
தகவலும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உறவினர்கள் இருந்துள்ளார்கள். 

அதனைதொடர்ந்து, இது தொடர்பில் உறவினர்களினால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த சிறுவனை காண்பவர்கள் உடனடியாக 768459796  இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version