நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார்.
அதன்படி, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்பட்ட சட்டச் சிக்கல்
வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டு, பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஏற்பட்ட சட்டச் சிக்கல் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட பல வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க அனுமதிக்கப்படவில்லை.
அந்த தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிதியமைச்சர் என்ற வகையில் அண்மையில் விசேட வர்த்தமானியை வெளியிட்டார்.
சுமார் 3 கப்பல்கள் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 500 வாகனங்கள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட குறிப்பிட்டுள்ளார்.
