Home இலங்கை பொருளாதாரம் ஜெர்மனியில் இருந்து பாரிய நிவாரணங்களுடன் இலங்கை வந்த சிறப்பு விமானம்

ஜெர்மனியில் இருந்து பாரிய நிவாரணங்களுடன் இலங்கை வந்த சிறப்பு விமானம்

0

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகியவற்றிலிருந்து 5 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிய சிறப்பு சரக்கு விமானம் இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

கூடாரங்கள், சமையலறைப் பாத்திரங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பேரிடர் நிவாரணப் பொருட்களின் பெரிய தொகுதியை விமானம் ஏற்றி வந்துள்ளது.

பாரிய நிவாரணம்

போயிங் – 747 – 400 சரக்கு விமானம் இன்று அதிகாலை 04.30 மணிக்கு ஜெர்மனியின் லீஜிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கான ஜெர்மன் துணைத் தூதர் சாரா ஹாசல்பார்த், ஐரோப்பிய ஒன்றியத்தின் பியர் டிரிபன் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவும் இந்தப் பொருட்களைப் பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version