Home இலங்கை சமூகம் பூநகரியில் உள்ள ஈழ நினைவுகளை மீட்டும் எச்சம் : பெருமிதம் கொள்ளும் மக்கள்

பூநகரியில் உள்ள ஈழ நினைவுகளை மீட்டும் எச்சம் : பெருமிதம் கொள்ளும் மக்கள்

0

Courtesy: uky(ஊகி)

பூநகரியில் ஈழ நினைவுகளை மீட்டும் வகையில் இன்று ஒரு கட்டுமானம் உண்டு என்றால் அதில் பூநகரி நல்லூர் வரவேற்பு வளைவும் ஒன்றாகும் என பூநகரியில் இருந்து புலம் பெயர்ந்து மீளவும் நாடு திரும்பிய மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

ஈழத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை கண்மூடித்தனமாக இலங்கை இராணுவம் அழித்து வரும் செயல்கள்  கோபமூட்டும் அதேவேளை மனவிரக்தியையும் ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி பூநகரியில் ஈழ நினைவுகளை மீட்டும் ஒரு கட்டுமானமாக பூநகரி நல்லூர் வளைவு இருக்கின்றது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு இன்றும் நிலைத்திருக்கும் ஒரு கட்டுமானமாக இது இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரின் பாரம்பரிய நிலம் 

ஈழத்தமிழரின் பாரம்பரிய நிலங்களில் வீரமிகு வரலாற்றை தன்னகத்தே கொண்ட நிலமாகவும் பூநகரி மண் இருக்கின்றது.

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் பலமான இராணுவத் தளமாக பூநகரி இராணுவ முகாம் இருந்த போது பூநகரியில் வாழ்ந்து வந்திருந்த மக்கள் தங்கள் நிலத்தை இழந்திருந்தனர்.

நில மீட்பு போரில் பல வீரமிகு நிகழ்வுகள் நடந்தேறிய கடல், தரை போரியல் பூமியாகவும் இது இருந்தது என பூநகரி மண் தொடர்பில் தன் நினைவுகளை மீட்டு பகிர்ந்திருந்தார்
புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தவரும் அண்மையில் பூநகரிக்கு வந்திருந்த முதியவர் ஒருவர்.

தமிழரின் தொல்லியல் மற்றும் ஆதி வரலாறுகளை சுமந்து ஈழத்தமிழரின் பாரம்பரிய வாழிடங்களில் முதன்மையான நிலங்களில் ஒன்றாக இது இருப்பதும் இந்த மண்ணில் பிறந்து என் இளம் பராயத்தை கடந்திருந்தேன் என்பதால் பெருமிதம் ஏற்படுவதாக தன் உணர்வுகளை அவர் தொடர்ந்து பகிர்ந்திருந்தார்.

உணர்வுகளின் வெளிப்பாடு

நீண்ட நெடிய ஈழப்போராட்ட சூழலால் புலம்பெயர்ந்த பலர் தங்கள் முதுமைக்காலங்களை தாம் பிறந்து வளர்ந்த தாயக மண்ணில் கழிக்க விரும்பி நிலம் திரும்பி வருவதை அவதானிக்கலாம்.

அப்படி பூநகரி வந்திருந்த ஒரு முதியவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூநகரி இருந்த நிலையை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அவரது உணர்வுப் பகிர்வு இருந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த நிழலரசு தொடர்திருக்கும் போது இன்று பூநகரி மண் எதிர்கொள்ளும் சவால்களை தவிர்த்திருக்கலாம் என மேலும் குறிப்பிட்டார்.

நல்லூர் வளைவு 

பூநகரி நல்லூர் மகாவித்தியாலயத்திற்கு முன்னுள்ள வரவேற்பு வளைவு 2009 இற்கு முன்னர் இருந்த நிழலரசின் நிர்வாக காலத்தில் அமைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் நினைவுகளை இல்லாது அழித்தொழித்து ஈழத்தில் வியாபித்திருக்கும் அவர்களது கட்டுமானங்களை துடைத்தழித்த சிங்கள அரசாங்கங்களால் இதனை அகற்ற முடியவில்லை.

வீதிகளில் உள்ள நகர வரவேற்பு வளைவுகளில் பூநகரி நல்லூர் மகாவித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வளைவும் ஒன்றாகும் எனவும் தொடர்ந்து குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version