Home இலங்கை சமூகம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் : அரசிடம் கோரிக்கை

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் : அரசிடம் கோரிக்கை

0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிட சென்றிருந்த போதே ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சாதாரண மக்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் அதிக பாதிப்பு

சில வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனால் அரசாங்க ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக நுவரெலியாவில் உள்ள ஆசிரியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வீடுகள் இன்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.   

   

NO COMMENTS

Exit mobile version