Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மற்றுமொரு தொகுதி உதவிப்பொருட்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மற்றுமொரு தொகுதி உதவிப்பொருட்கள்

0

இந்தியாவின் “ஒபரேசன் சாகர் பந்து” திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மனிதாபிமான
உதவிகளின் ஒன்பதாவது தொகுதி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அவசர உதவியின் ஒரு பகுதியாக, 65 மெட்ரிக் டன் எடையுள்ள 110 அடி பெய்லி
பாலத்தையும், ஒரு பேக்ஹோ இயந்திரத்தையும் சிறப்பு விமானம் விமானத்தில்
ஏற்றி வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வைத்து முறையாக

இந்தப் பொருட்களுடன் இந்திய இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த பதின்மூன்று
பொறியாளர்களும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கை இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, இலங்கையில் உள்ள
இந்திய உயர் ஸ்தானிகரக அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்தப் பொருட்களை விமான
நிலையத்தில் வைத்து முறையாக பெற்றுக்கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version