யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 27.12.2024 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணை
இது தொடர்பிலான வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால்
ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.