Home இலங்கை சமூகம் தேசபந்துக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரப்பிரசாதங்களை நீக்குமாறு கோரிக்கை

தேசபந்துக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரப்பிரசாதங்களை நீக்குமாறு கோரிக்கை

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரப்பிரசாதங்களை நீக்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெலிகம, பெலேன பிரதேசத்தில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை

அதனையடுத்து கடந்த சில நாட்களாக தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளார். அதன் மூலம் அவர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார்.

இந்நிலையில் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனம், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் ஆறுபேர், விசேட அதிரடிப்படையினர் இருவர், உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை நீக்குமாறு பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக குமாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே தேசபந்து தென்னகோனை தேடி பொலிஸ் குழுக்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version