மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் விளம்பர பதாகை அகற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு
முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12.04.202) மட்டக்களப்புக்கு விஜயம்
செய்ய உள்ளார்.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது வருகையை அறிவிக்கும்
பதாகைகள் கட்சியினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பதாகை அகற்றல்
இவை தேர்தல்
விதிமுறைகளுக்கு முரணானது என மாவட்ட தேர்தல்
கண்காணிப்புக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து நேற்று (9) இரவு மாவட்ட பொலிஸாரினால் இப்பதாகைகள் அகற்றும்
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, மாவட்ட செயலக தேர்தல் கண்காணிப்பு குழு உயர்
அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.
