Home இலங்கை சமூகம் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்: வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு

நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்: வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு

0

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை சாரதிகள் இணையம் மூலமாக செலுத்துவதற்கான முன்னோடி செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி அரசாங்கம் அறிமுகப்படுத்திய GovPay செயலி மூலம் தண்டப்பணத்தை செலுத்த முடியும்.

இந்த திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியில் 11 இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

GovPay வசதி

இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என வீதி பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.

GovPay வசதி பிப்ரவரி 7ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது, இது பொதுமக்களுக்கு அனைத்து அரசாங்க கட்டணங்களையும் டிஜிட்டல் முறையில் செலுத்த உதவும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version