Home இலங்கை சமூகம் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை (CEB) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொள்வனவுகள் தொடர்பில் ஊடகங்களில் அண்மைக்காலமாக வெளியான செய்திகளில் “எரிபொருள்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டுள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு கனரக எரிபொருள் எண்ணெய் (HFO), நாப்தா (Naphtha) மற்றும் டீசல் (Diesel) ஆகிய மூன்று வகையான பெட்ரோலிய எரிபொருட்களை பயன்படுத்துவதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சார உற்பத்தி 

பல விநியோகஸ்தர்கள் இருப்பதால், போட்டி ஏலம் மூலம் வாங்குவதற்கு டீசல் மட்டுமே எரிபொருளாக இருந்ததாக தெரிவித்த CEB, எவ்வாறாயினும், முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் உட்பட, மின்சார உற்பத்திக்கான டீசலை போட்டி ஏலத்தின் மூலம் ஒருபோதும் வாங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, புதிய நிர்வாகம் மின்சார உற்பத்திக்கான டீசல் வாங்குவதற்கு எதிராக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் டீசலை பொருளாதார ரீதியாக லாபகரமான மின்சார உற்பத்தி தெரிவாக கருதவில்லை எனவும் CEB தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை டீசலைப் பயன்படுத்தி 1.1% மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதை வெளிப்படுத்திய CEB, அதன் அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் போட்டி நடைமுறைகளை உறுதிப்படுத்துவதாக வலியுறுத்தியுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version