Courtesy: Sivaa Mayuri
கடந்த அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதியில் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது.
மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தநிலையில், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து மக்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அனுமதிப் பத்திரங்கள்
முன்னதாக, அனுமதிப் பத்திரங்களை பெற்றவர்களின் பெயர்களுக்கு நிகராக, மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு பரிந்துரை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கோரியபோதே, அமைச்சர், இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்களின் பெயர்களை அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்படத்தக்கது.